மாவட்ட செய்திகள்

தோகைமலையில் வாகன சோதனை: ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் + "||" + Vehicle test in Thodigalyam: Rs 1 lakh confiscated by goat trader

தோகைமலையில் வாகன சோதனை: ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

தோகைமலையில் வாகன சோதனை: ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
தோகைமலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது ஆடு வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் சிவானந்தாபுரத்தில் உள்ள மச்சுவாடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 49) என்பதும், ஆடு வியாபாரம் செய்து வரும் இவர் அதேபகுதியில் உள்ள டிரைவர் வீரப்பன் (45) என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கரூர் பகுதியில் செம்மறி ஆடுகள் வாங்க வந்ததும் தெரியவந்தது.

பணத்திற்கு எந்தவிதமான ஆவணமும் அவர்களிடம் இல்லாத காரணத்தால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் துணை அலுவலர் லியாகத்திடம் ஒப்படைத்தனர். அதனை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் திருச்சி, பெரம்பலூரில் உள்ள வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2. டெல்லியில் கைதான 14 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை திருவாரூர், நாகை உள்பட 9 மாவட்டங்களில் நடந்தது
நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் கைதான 14 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். திருவாரூர், நாகை உள்பட 9 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது.
3. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.24 லட்சம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
5. நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா? 2 பேரை பிடித்து விசாரணை
நாகை அருகே 2 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.