தேர்தல் விதிமுறை தொடர்பாக திருமண மண்டபம்-அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை கலெக்டர் தலைமையில் நடந்தது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 10-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அச்சக உரிமையாளர்கள், கலையரங்க உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரம் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் முதலியவற்றை அச்சிடும் போது அதனை வெளியிடும் நபர் தன்னை அடையாளம் காணும் வகையில் இரண்டு நபர்களால் சான்றளிக்கப்பட்ட உறுதிமொழி ஒன்றை இரட்டை படிவத்தில் அச்சகத்திற்கு அளிக்க வேண்டும். அவ்வுறுதிமொழி படிவம் ஒன்றினையும், அச்சிடப்பட்டுள்ள ஆவணத்தின் நகல் ஒன்றினையும் அச்சக உரிமையாளர், அச்சடித்த 3 தினங்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் படிவம் ஏ, பி-யில் அளிக்க வேண்டும்.
அச்சடிக்கும் சுவரொட்டிகள், பேனர் ஆகியவற்றில் தொடர்புடைய அச்சகத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127(ஏ)-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து அச்சக உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு அரசியல் கட்சியையோ தனி நபரையோ தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது.
இதேபோல் திருமண மண்டபங்களில் திருமண விழாக்கள் மற்றும் இதர குடும்ப நிகழ்ச்சி விழாக்கள் நடத்த தடை ஏதும் இல்லை. இந்த விழாக்களில் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பங்குபெறுவதில் தடையேதுமில்லை. ஆனால் திருமண மற்றும் குடும்ப விழாக்களில் அரசியல் கட்சி சின்னங்கள், பிரசார வாசகங்கள், படங்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது. அனுமதியின்றி வைக்கப்பட்டால், அவற்றை அகற்ற வேண்டி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற்று, திருமண மண்டப உரிமையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பத்தை அளித்து, உரிமையாளரின் சம்மதத்துடன் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், இதர நிகழ்ச்சிகள் திருமண மண்டபங்களில் நடக்கும் போது அருகாமையிலுள்ள பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், கொடிகள் எதுவும் வைக்கக்கூடாது.
இந்த நிகழ்ச்சிகளில் பணம், பரிசு பொருட்கள், வேட்டி- சேலைகள், மது பாட்டில்கள் எதுவும் வினியோகம் செய்யக் கூடாது. அவ்வாறு வினியோகம் எதுவும் நடைபெற்றால், இதுதொடர்பான புகாரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) செல்வகுமார், கூடுதல் நேர்முக உதவியாளர் (நில அளவை) குழந்தை சாமி மற்றும் அச்சக உரிமையாளர்கள், கலையரங்க உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story