மாவட்ட செய்திகள்

படிக்கவில்லை என்று தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Police have investigated the suicide plus 1 student suicide by poisoning

படிக்கவில்லை என்று தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

படிக்கவில்லை என்று தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
வலங்கைமான் அருகே படிக்கவில்லை என்று தந்தை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் யோகேஷ்(வயது17). இவர் தனது தாத்தா வீட்டில் தங்கி இருந்து ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி முதல் அவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி வந்தார்.


இந்தநிலையில் விடுமுறை தினத்தன்று வீட்டிற்கு வந்த யோகேஷ் தேர்வுக்கு படிக்காமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த யோகேஷ் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்காமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பறக்கும் படை சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை
கோவையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
3. எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
வலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.