கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்பு


கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 16 March 2019 10:06 PM GMT (Updated: 16 March 2019 10:06 PM GMT)

கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிக்கிய விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மங்களூரு,

இந்திய கப்பல் படைக்கு சொந்தமான ‘சாகர் சம்பதா’ என்ற ஆராய்ச்சி கப்பலில் 16 விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் கொண்ட குழு மங்களூருவில் உள்ள அரபிக்கடலுக்கு சென்றுள்ளது. அந்த குழுவினர் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அந்த குழுவினர் நடுக்கடலில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென்று ஆராய்ச்சி கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கப்பலில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

இதுதொடர்பாக ஆராய்ச்சி கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல் படையினர், ‘சுஜா’, ‘விக்ரம்’ ஆகிய மீட்பு கப்பல்களில் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து ெசன்றனர்.

அங்கு மீட்பு கப்பல்களில் சென்ற கடலோர காவல் படையினர், ஆராய்ச்சி கப்பலில் இருந்த 16 விஞ்ஞானிகள் உள்பட 36 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்கள் ஆராய்ச்சி கப்பலில் இருந்து மீட்பு கப்பல்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து மீட்பு கப்பல்களில் சென்ற கடலோர காவல் படையினர் ஆராய்ச்சி கப்பலில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 8 மணி நேரம் போராடி அணைத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட 36 பேரும் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆராய்ச்சி கப்பலில் தீப்பிடித்ததும், உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் 2 மீட்பு கப்பலில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 16 விஞ்ஞானிகள் உள்பட 36 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆராய்ச்சி கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த கப்பலில் தங்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்துக் கான காரணம் குறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். ஆராய்ச்சி கப்பலில் தீப்பிடித்து எரிந்ததும், 2 மீட்பு கப்பல்களில் சென்று கடலோர காவல் படையினர் தீயை அணைக்கும் படங்களை தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

Next Story