உத்திரமேரூர் அருகே 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


உத்திரமேரூர் அருகே 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 3:41 AM IST (Updated: 17 March 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது கைப்பற்றி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உத்திரமேரூர்,

தேர்தல் பறக்கும்படை தாசில்தார் சத்தியா தலைமையில் அதிகாரிகள் உத்திரமேரூரை அடுத்த குருவிமலை என்னும் இடத்தில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.

அந்த லாரியில் 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி லாரியுடன் மாகரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணை

அந்த லாரியை ஓட்டிவந்த மும்பையை சேர்ந்த அணில்பகாரோ (வயது 28) என்பவரை பிடித்து விசாரித்தபோது அந்த லாரியில் இருக்கும் எரிசாராயத்தை மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தில் செயல்படும் மதுபான ஆலைக்கு ஏற்றிவந்ததாக அவர் கூறியதாக தெரியவருகிறது.இதுகுறித்து காஞ்சீபுரம் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த துறையினர் லாரி டிரைவர் மற்றும் மதுபான ஆலை நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story