மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை + "||" + Near Arakonam Public Siege of the Regional Development Officer for Drinking Water

அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை

அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பெண்கள் முற்றுகையிட்டனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே உள்ள தணிகைபோளூர் ஊராட்சிக்குட்பட்ட நாகாலம்மன் நகர், ராகவேந்திரா நகர், சக்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வரவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊராட்சி மன்ற செயலாளரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக ஆர்வலர் என்.தாரகேஸ்வரிமூர்த்தி தலைமையில் நேற்று அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வரவில்லை. அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று அருகில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே, எங்கள் பகுதியில் கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்றனர்.

பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி கூறுகையில், ‘தணிகைபோளூர் ஊராட்சியில் இருக்கிற குடிநீரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரித்து வழங்கி வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் சில இடங்களில் பிரச்சினை இருந்து வருகிறது. நாகாலம்மன் நகர் பகுகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதே பகுதியில் நீரோட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்து விரைவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்தடையை கண்டித்து துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
வாணாபுரம் அருகே மின்தடையை கண்டித்து துணை மின்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2. ரேஷன் கடை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ரேஷன் கடை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. வீட்டுமனைப்பட்டா கேட்டு பவானி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டுமனைப்பட்டா கேட்டு பவானி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
4. கயத்தாறு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5. விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.