தூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
தூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நடத்தை விதிகளை கண்காணிப்பதற்காக 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் தூத்துக்குடி தொகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் பீச் ரோடு, 3-வது மைல், திருச்செந்தூர் ரோடு, தாளமுத்துநகர் ரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று வாகன சோதனை நடந்தது.
அதேபோன்று தருவைகுளம் ரோட்டில் உள்ள வெள்ளப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை சோதனை செய்தபோது, அதில் இருந்தவர் ரூ.2½ லட்சம் வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். உடனடியாக பணத்தை கொண்டு வந்தவர், அதற்கான ஆவணங்களை கொண்டு வரச் செய்து அதிகாரிகளிடம் காண்பித்தார். இதனால் அவருடைய பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story