செலவின கணக்குகள் குறித்து விலைப்பட்டியல் தயார் செய்ய அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம்


செலவின கணக்குகள் குறித்து விலைப்பட்டியல் தயார் செய்ய அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2019 10:45 PM GMT (Updated: 18 March 2019 7:19 PM GMT)

செலவின கணக்குகள் குறித்து விலைப்பட்டியல் தயார் செய்ய அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகளால் விளம்பர வாகனங்கள், ஒலிபெருக்கிகள், பதாகைகள், கட்-அவுட்டுகள் மற்றும் இதர வகைகளில் செலவிடப்படும் செலவின கணக்குகளை கணக்கிடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு விலைப்பட்டியல் தயார் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது மாவட்ட குழுவினர்களால் வழங்கப்பட்டுள்ள விலைப்பட்டியல் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story