மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிகள் மீறல்: அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது வழக்கு + "||" + Violation of election rules: case against 70 people including DMK, ADMK

தேர்தல் விதிகள் மீறல்: அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது வழக்கு

தேர்தல் விதிகள் மீறல்: அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க.வினர் உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை, அந்தந்த கட்சியினரே மறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு கொடிக் கம்பங்களை மறைக்காதபட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.


மேலும் சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் எழுதுதல், சுவரொட்டி ஒட்டுதல், கொடிக்கம்பங்கள் நடுதல் உள்பட தேர்தல் விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கடந்த 14-ந்தேதி 14 பேர் மீதும், 15-ந்தேதி 37 பேர் மீதும், 16-ந்தேதி 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், அ.தி.மு.க.வினர் 2 பேர் மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மொத்தம் 70 பேர் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. இன்று போராட்டம்; அன்பழகன் எம்.எல்.ஏ. தகவல்
கவர்னர் கிரண்பெடியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது.
2. பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டம்; அ.தி.மு.க. பங்கேற்கவில்லை
பிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை.
3. அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு; வேடசந்தூர் அருகே பரபரப்பு
வேடசந்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்
நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
5. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முழுமையாக இணையவில்லை: அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் முழுமையாக இணையவில்லை. அ.தி.மு.க.வுக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.