மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள் + "||" + At the Collector's office Women who gave petition for drinking water

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள்

கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுத்த பெண்கள்
குடிநீர் வசதி செய்து செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்கள் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூர் அருகே உள்ள புலவர்சேரி கிராமத்தில் சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். அதைத்தொடர்ந்து அந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து குடிநீர் வழங்க கோரி மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் அவர்கள் கலெக்டரிடம் முறையிடுவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அந்த கிராமத்து பெண்கள் ஒன்றி திரண்டு வந்தனர். அவர்கள் காலிக்குடங்களுடன் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:– எங்களது கிராமமான புலவர்சேரியில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் இங்குள்ள ஆழ்துளை மோட்டார் மற்றும் தொட்டி ஆகியவை கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்து விட்டது. அன்றிலிருந்து பழுதினை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புலவர்சேரி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
2. அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் மனு
திண்டுக்கல் மாகாளி குளத்தில் அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
3. செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
4. அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
5. தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தவணை முறை திட்டத்்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.