தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை :பீட்டர் முகர்ஜிக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி
இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மும்பை,
இந்திராணியின் 3-வது கணவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாகி பீட்டர் முகர்ஜியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு ஆஞ்சியோகிராபி சோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இருதய வால்வுகளில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் அவரை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர்.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற அனுமதி கேட்டு பீட்டர் முகர்ஜி சிறப்பு கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உள்ளது.
Related Tags :
Next Story