மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி + "||" + Near Thiruvallur 2 killed in two accidents

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் விக்னேஷ் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வேப்பம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக அயத்தூர் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அயத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதை பார்த்த டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாவோஸ் நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.
2. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
3. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி
மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
5. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.