காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருவாரூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைமை யிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனையொட்டி நேற்று சென்னையில் இருந்து மு.க.ஸ்டாலின் விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார்.

அங்கிருந்து காரில் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்தடைந்தார். பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு தனது பாட்டியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் நேரு, மாவட்ட செயலாளர் பூண்டி .கலைவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் அங்கிருந்து மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் கீழவீதியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்று ஓய்வெடுத்தார்.

Next Story