திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண் டாக்டர் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை
வரதட்சணை கொடுமை செய்யும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிப்பதற்காக கைக்குழந்தையுடன் பெண் டாக்டர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டு இருந்தது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் பெண் ஒருவர், அவரது குடும்பத்தை சேர்ந்த சிலருடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது, தனது கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், அதனை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், அவருடன் வந்தவர்களையும் சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது ஒரு கேனில் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்எண்ணெய் கேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுகப்பிரியா என்பதும், சித்தா டாக்டர் என்பதும் தெரியவந்தது. இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. மணிகண்டனும் டாக்டர் ஆவார்.
கடந்த சில மாதங்களாக டாக்டர் மணிகண்டன் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும், குடும்பத்தினரையும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாகவும் கூறினார். டாக்டர் சுகப்பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story