வேட்பாளர் செலவுகளை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருப்பூரில் முகாம்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் செலவுகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கண்காணிப்பதற்காக சவுமியா ஜித்தாஸ் குப்தா என்பவர் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 93852- 86601 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அதுபோல் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கண்காணிப்பதற்காக சிட்னி டிசில்வா தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 93852-86602 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் செலவினங்களை கண்காணிப்பதுடன், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்வைக்குழு, கணக்குக்குழு ஆகியோரின் பணிகளை ஆய்வு செய்வார்கள்.
மேலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டாலும், தகவல் தெரிவிக்க விரும்பினாலும் தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சவுமியா ஜித்தாஸ் குப்தா, சிட்னி டிசில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story