மனைவி-மாமியார் மீது தாக்குதல், தொழிலாளி கைது
குடும்ப பிரச்சினையில் மனைவி-மாமியாரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
சுரண்டை அருகே சாம்பவர் வடகரை மாஞ்சோலைதெருவை சேர்ந்த நடராசன் மகன் பாலமுருகன்(வயது25). தொழிலாளி. இவருக்கும், ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தை சேர்ந்த முப்புடாதி மகள் ஈஸ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று ஈஸ்வரியின் தாயார் காளியம்மாள் மகளை பார்க்க சாம்பவர் வடகரை வந்தார். அப்போது கணவர் அடிக்கடி தகராறு செய்வதாக கூறிய மகளை, தனது வீட்டுக்கு காளியம்மாள் அழைத்து சென்று விட்டார்.
மாலையில் வீடு திரும்பிய பாலமுருகன், மனைவி இல்லாததால் அவரை தேடி பூலாங்குளம் சென்றார். அங்கு இருந்த மனைவியை அவர் வீட்டுக்கு அழைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாமியாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த அரிவாளை திருப்பி பிடித்து கொண்டு காளியம்மாள், மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவர்களை மீட்டனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்த்தனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story