வானவில் : உடனடி வெந்நீர் தரும் ‘டுவோ கராபெ’ கருவி
நமது அன்றாடத் தேவைகளுக்கு வெந்நீர் தேவைப்படும். இதற்காக அடிக்கடி அடுப்பை பற்றவைத்துக் கொண்டிருந்தால் எரிபொருள் அதிகம் விரயமாகும்.
வெகு விரைவாக வெந்நீரை தரும் ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் பெயர் ‘டுவோ கராபெ’ என்பதாகும். மிதமான மற்றும் அதிகமான என்று எவ்விதமாக வெந்நீர் வேண்டுமோ அந்த வெப்பநிலையில் நமக்கு வேண்டியவாறு அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம்.
இன்றைய அவசர உலகத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள இதனை உபயோகிப்பது வெகு சுலபம். சாதாரண தண்ணீரை ஜக்கில் நிரப்பி சுவிச்சை அழுத்தினால் போதும். உடனடியாக கோப்பையில் ஊற்றினால் சூடான நீராக வெளிவரும். வெந்நீர் தேவையில்லாவிட்டால் சாதாரண சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் மறுபுறத்தில் ஊற்றிக் கொள்ளலாம்.
காபி டிகாஷன் போடுவதற்கு குழந்தைகளுக்கு தேவையான சூட்டில் நீர் என இந்த கருவியிலிருந்து ஒரு டிகிரி பாரன்ஹீட்க்குள்ளாக எந்த வெப்பநிலையிலும், விரைவாக வெந்நீரை பெறலாம்.
இது அதிக மின்சாரத்தையும் உபயோகிக்காது. வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் பேட்டரி போட்டு எடுத்துச் செல்லலாம்.
காம்பாக்ட்டான மற்றும் கண்ணைக் கவரும் தோற்றத்திலும் இருக்கிறது இந்த டுவோ கராபெ.
Related Tags :
Next Story