வானவில் : லெனோவா ஐடியா பேட் லேப்டாப்


வானவில் : லெனோவா ஐடியா பேட் லேப்டாப்
x
தினத்தந்தி 20 March 2019 4:10 PM IST (Updated: 20 March 2019 4:10 PM IST)
t-max-icont-min-icon

லெனோவா நிறுவனம் ஐடியா பேட் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு பொருள்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் லெனோவா நிறுவனம் சமீபத்தில் ஐடியா பேட் என்ற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது 15.60 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 1366 X 768 என்ற விகிதத்தில் பிக்ஸெல் உள்ளதால் படங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். இது 4 ஜி ரேம் 1 டெராபைட் ஹெச்.டி.டி. நினைவக வசதி கொண்டது.

இதில் இன்டெல் ஹெச்.டி. கிராபிக்ஸ் 520 கார்டு உள்ளது. புளூடூத் வழியாகவும் எதெர்னெட் மூலமாகவும் இணைத்து செயல்படுத்த முடியும். இதில் 3 யு.எஸ்.பி. போர்ட்கள் உள்ளன. 2 யு.எஸ்.பி.க்கள் 3.0 டைப் சி பிரிவைக் கொண்டதாகவும், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், மைக் இன் வசதி, ஆர்.ஜே45 (லான்) போர்ட் இதில் உள்ளது.

பெய்ஜிங்கில் 1984-ம் ஆண்டு உருவான லெனோவா நிறுவனம் 2005-ம் ஆண்டில் ஐ.பி.எம்.மின் பர்சனல் கம்ப்யூட்டர் சார்ந்த பிரிவை மட்டும் கையகப்படுத்தியது. அதிலிருந்து பல கம்ப்யூட்டர், லேப்டாப்களைத் தயாரித்து வருகிறது. 8 ஆண்டுகளில் இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர் உற்பத்தியில் உலகிலேயே முன்னணி நிறுவனமாக வளர்ந்தது.

இந்நிறுவனம் 2011-ம் ஆண்டிலிருந்து ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் டேப்லெட்களை 2011-ம் ஆண்டு தயாரிக்கத் தொடங்கியது. 2012-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்திடமிருந்து மோட்டரோலா செல்போன் பிரிவைக் கையகப்படுத்தி கடந்த 5 ஆண்டுகளாக மோட்டரோலா ஸ்மார்ட்போன்களை லெனோவா நிறுவனம் தயாரித்து வருகிறது. சீனாவில் மட்டும் இந்நிறுவனம் ஸுக் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ஐடியா பேட் லேப்டாப் எடை 2.10 கிலோவாகும். இதன் விலை ரூ.22 ஆயிரமாகும்.

Next Story