வானவில் : மேம்படுத்தப்பட்ட பிளாஷ் ட்ரைவ்கள் (வெர்சன் 3 .0)


வானவில் : மேம்படுத்தப்பட்ட பிளாஷ் ட்ரைவ்கள் (வெர்சன் 3 .0)
x
தினத்தந்தி 20 March 2019 4:24 PM IST (Updated: 20 March 2019 4:24 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நமக்கு கிடைத்த அருமையான பொக்கிஷங்கள் பிளாஷ் ட்ரைவ்கள்.

ஆவணங்களை தொகுத்து சேர்ப்பது, ஒரு கணினியிலிருந்து இன்னொரு கருவிக்கு தகவலை மாற்றுவது, படமோ, பாடலோ தரவிறக்கம் செய்து கொள்ள உதவுவது என்று இதன் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். யு.எஸ்.பி பிளாஷ் ட்ரைவ்களில் சேகரிக்க உதவும் அளவுகளை (storage space) வைத்து அவற்றை தரம் பிரிப்பதுண்டு. இது வரை பெரும்பாலும் யு.எஸ்.பி 2.0 ட்ரைவ்கள் தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. தற்போது அதை விட சேமிக்கும் இடமும் வேகமும் அதிகமுள்ள யு.எஸ்.பி 3.0 ட்ரைவ்கள் வந்துவிட்டன. இதை இணைக்கும் வசதி நமது கணினியிலோ அல்லது டேப்லெட்டிலோ இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே இதனை வாங்க வேண்டும். இதனை இணைத்துக் கொள்ளும் பகுதி நீல நிறத்தில் நமது கருவியில் அமைக்கப்பட்டிருக்கும். சில கணினிகளில் இரண்டு வகையான ட்ரைவ்களையும் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கும். யு.எஸ்.பி 3.0 ட்ரைவ்கள் ஐந்து கிகா பைட் தகவல்களை ஒரு நொடியில் சேமித்துக் கொள்ளும். இது 2.0 வை விட பத்து மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. சாதாரணமாக, நமது ஆவணங்களை மட்டும் சேமித்துக் கொள்ள 2.0 வே போதுமானது.

மிகப் பெரிய டேட்டாவை சேகரிக்க மட்டுமே 3.0 தேவைப்படும். விலையை பொறுத்தவரை 3.0 சற்று அதிகம் தான்.நமது தேவையை மனதில் கொண்டு எது வேண்டுமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Next Story