வானவில் : ஹூவாய் ஸ்மார்ட் வாட்ச்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஹூவாய் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களையும் தயாரித்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் வாட்ச் என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச்களை பல நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் ஹூவாய் நிறுவனமும் அவற்றுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கியுள்ளது. பேட்டரி திறன் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமான பிட்னெஸ் ஆலோசனைகளை அறிவியல் ரீதியான அணுகுமுறையில் வழங்குகிறது ஹூவாய்.
வழக்கமான கைக்கடிகாரங்களைப் போன்ற தோற்றத்தோடு அதிக சக்தி வாய்ந்த பேட்டரிகளைக் கொண்டதாக, பிட்னெஸ் ஆலோசனைகள் வழங்கும் தன்மையுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிட்னெஸ் வாட்ச்சாக ஹூவாய் ஜிடி வந்துள்ளது. 10.6 மி.மீ தடிமனுடன் கைக்கு அழகான தோற்றப் பொலிவை தரும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது. 1.39 அங்குல டயல் அதுவும் அமோலெட் உயர் தொடு உணர்திரை கொண்டது. இரண்டு விதமான அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உடல் பாகம் அல்லது செராமிக் பீஸெல்லை கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
உடலை பிட்டாக வைத்திருக்க விரும்புவோருக்கு மிகவும் ஏற்றது. இதில் உள்ள ஜி.பி.எஸ். சிப் 3 செயற்கை கோள்களுடன் இணைப்பு கொண்டது. இதனால் நீங்கள் இருக்குமிடம் துல்லியமாக தெரியும். அத்துடன் மலையேறுதல், நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் மிதித்தல், நீச்சல் பயிற்சி ஆகியவை குறித்த பயிற்சியையும் இதன் மூலம் பெறலாம். இதில் 3.0 ஹார்ட் ரேட் மானிட்டரிங் தொழில்நுட்பம் உள்ளதால், உங்கள் இதய துடிப்பை துல்லியமாகக் காட்டும். உடற்பயிற்சி செய்யும்போது எந்த அளவுக்கு கலோரி சக்தி எரிக்கப்பட்டது, எத்தனை அடி தூரம் நடந்துள்ளர்கள் என்ற விவரங்களை அளிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது இதயதுடிப்பு எந்த அளவுக்கு உள்ளது போன்ற விவரங்களும் இதில் பதிவாகும்.
இது தவிர பேண்ட் 3 புரோ என்ற பெயரிலான ரிஸ்ட்பேண்ட் வாட்ச் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கானது. இது 0.95 அங்குல வண்ண தொடுதிரையுடன் வந்துள்ளது. இதை எந்த பக்கத்திலிருந்தும் பயன்படுத்த முடியும். இது நாள் முழுவதும் இதய துடிப்பு எவ்விதம் உள்ளது என்பதை காட்டும். இதில் உள்ள ட்ரூ ஸீன் 3.0 நுட்பமானது உங்களது தூங்கும் நேரத்தையும், சரியாக தூங்கினீர்களா என்பதையும் ஆராயும். இது தொடர்பான தகவல் தொகுப்பிலிருந்து உங்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதலையும் அளிக்கும்.
இவற்றுடன் ஹூவாய் 3 இ என்ற பெயரில் பிரேஸ்லெட் மாதிரியான ஸ்மார்ட் வாட்ச்சையும் அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் ஜிடி மாடல் வாட்ச் விலை ரூ.16,990. ஸ்போர்ட்ஸ் மாடல் விலை ரூ.15,990. முன்னதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.2,999 மதிப்பிலான ஹூவாய் ஸ்போர்ட்ஸ் இயர்போன் இலவசமாக அளிக்கப்படும். ஸ்மார்ட் வாட்ச்களை 3, 6, 9 மாத சுலப தவணையில் வட்டியின்றி அளிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் பேண்ட் 3 புரோ மாடல் இம்மாதம் 26-ம் தேதி முதல் அமேசானில் ரூ.4,699 விலையில் கிடைக்கும்.
Related Tags :
Next Story