நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி திருவாரூரில், முத்தரசன் பேச்சு


நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி திருவாரூரில், முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 6:44 PM GMT)

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி என்று முத்தரசன் கூறினார்.

திருவாரூர்,

இந்த தேர்தல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல். மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியைப்போல் தோழமை கட்சிகளை அரவணைத்து தொகுதிகளை ஒதுக்கி உள்ளார். தொகுதி ஒதுக்கீடு செய்வதில் கருத்து வேறுபாடு இல்லாமல் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

40 நாடாளுமன்ற தொகுதிகளில் சரிபாதியான 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்துள்ளார். எனவே 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அதற்கு இந்த கூட்டம் சாட்சி.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. அதேபோல அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளது. இவர்களது ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது கூறுவது யாரை ஏமாற்ற?.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story