மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் தங்க தகடுகள் பறிமுதல் + "||" + Thousands of gold plates were seized from Malaysia at Trichy airport

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் தங்க தகடுகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் தங்க தகடுகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அதை கடத்தி வந்த சென்னை பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன.


திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். இதில் சில பயணிகள் கடத்தி வரும் தங்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது அஜித் என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 40-க்கும் மேற்பட்ட செல்போன் பேட்டரிகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், செல்போன் பேட்டரிகளை வெளியே எடுத்து பிரித்துப்பார்த்தனர்.

அப்போது, அந்த பேட்டரிகளுக்குள் 40 தங்க தகடுகள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 24 காரட் மதிப்பு கொண்ட அந்த தங்கத்தகடுகள் மொத்தம் 319 கிராம் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.10¼ லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து செல்போன் பேட்டரிகளையும், தங்கத்தகடுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது அஜித்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.
2. ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்
ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3. மணல் கடத்தல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது 2 மாட்டு வண்டிகள்-சரக்கு வேன் பறிமுதல்
மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 மாட்டு வண்டிகள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
4. அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
அறந்தாங்கி அருகே உள்ள வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படுமா? என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
5. கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.