மாவட்ட செய்திகள்

கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது + "||" + Two arrested for robbery in liquor shops

கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது

கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்- சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை அருகே சோழசக்கரநல்லூர் கிராமத்தில் அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 10 அட்டை பெட்டிகளில் 480 மதுபாட்டில்களும், 1,000 லிட்டர் சாராயமும் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் காரை ஓட்டிவந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.


விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜ் (வயது 47), வைத்தீஸ்வரன்கோவில் அருகே உள்ள கொண்டத்தூர் காலனித்தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் தினேஷ்குமார் (21) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கார்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக குத்தாலத்தை சேர்ந்த கமல் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது
மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை
காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. பர்கூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய வீரப்பன் கூட்டாளி கைது
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி போதமலையில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
4. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.
5. வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது
வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.