மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் தகவல் + "||" + In the Kumari district, the ban on the filling of African fish buffalo fish collector information

குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளி கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை, திலேப்பியா போன்ற மீன் வகைகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன் வளர்ப்பு பணி செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது.

ஏன் எனில் இவ்வகை மீன்கள், மற்ற மீன்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. மேலும் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும் தன்மை கொண்டது ஆகும். எனவே ஆப்பிரிக்க ரக மீன்களை வளர்த்தால் நீர் நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழிய வாய்ப்பு உள்ளது.

அதோடு இந்த மீன்கள் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இந்த ரக மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கமடையும் வல்லமையுடையது.

மேலும் மழை மற்றும் பெருவெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்க்கப்படும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளது. தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர் நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து ஒரு கால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற இன மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை குமரி மாவட்டத்தில் வளர்க்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதை மீறி யாரேனும் அந்த ரக மீன்களை வளர்ப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது
நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையை நீக்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்தாப் ஆலத்துக்கு ஒரு ஆண்டு தடை
வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்னதாக சவுதம்டனில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.
3. தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை கள ஆய்வு செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
4. பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு
இன்ஜமாம் உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
5. சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ ஆணையாளர் எச்சரிக்கை
சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.