கொடைக்கானலில், வாடகை செலுத்தாத 38 கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு


கொடைக்கானலில், வாடகை செலுத்தாத 38 கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில், வாடகை செலுத்தாத 38 கடைகள் பூட்டி ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமாக 989 கடைகள் உள்ளன. இதில் 868 தரைக்கடைகளும் அடங்கும். இந்த கடைகள் மாத வாடகை அடிப்படையில் சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வாடகையினை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாமல் உள்ளனர்.

இதனால் ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில் நகராட்சி மேலாளர் குமார் சிங், வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அப்பர் லேக்வியூ, பிரையண்ட் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மொத்தம் 38 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்த பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் வருகிற 30-ந் தேதிக்குள் வாடகை செலுத்தாத அனைத்து கடைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story