செங்கல்பட்டு புறவழி சாலையில் தென்மாவட்ட அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு புறவழி சாலையில் தென் மாவட்ட அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு புறவழி சாலை பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டுமானால் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் நின்று செல்லும். ஆனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நின்று செல்வதில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் நின்று செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு கூட எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
செங்கல்பட்டு புறவழி சாலை பஸ் நிலையத்தில் அனைத்து ஆம்னி பஸ்களும் நின்று செல்கின்றன. ஆனால் சில அரசு பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மற்ற பஸ்கள் நிற்பதில்லை. இதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி சென்று, அங்கிருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பயண நேரமும், டிக்கெட் செலவும் அதிகமாக உள்ளது.
புறவழி சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று சென்றால், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு தனியார் துறை அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த புறவழி சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து தெற்கே கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரையிலும் ஊட்டி, பெங்களூரு செல்வதற்கும் வடக்கே சென்னை மற்றும் கோயம்பேடு பஸ் நிலையம் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
கடந்த மாதம் இந்த பஸ் நிறுத்தத்தில் தனியார் நிறுவனம் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் 24 மணி நேர காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டது. பயணிகள் அமர இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இரவு நேரங்களில் பயம் இல்லாமல் பயணிக்க நவீன மின்விளக்குகளும் அமைத்து உள்ளனர். இவ்வளவு வசதிகள் இருந்தும் அரசு விரைவு பஸ்கள் நின்று செல்வதில்லை. ஆகவே செங்கல் பட்டு புறவழிச்சாலை பகுதியில் அனைத்து அரசு விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள், முதல்-அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு புறவழி சாலை பஸ் நிலையத்தில் அனைத்து ஆம்னி பஸ்களும் நின்று செல்கின்றன. ஆனால் சில அரசு பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மற்ற பஸ்கள் நிற்பதில்லை. இதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி சென்று, அங்கிருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பயண நேரமும், டிக்கெட் செலவும் அதிகமாக உள்ளது.
புறவழி சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று சென்றால், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு தனியார் துறை அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த புறவழி சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து தெற்கே கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரையிலும் ஊட்டி, பெங்களூரு செல்வதற்கும் வடக்கே சென்னை மற்றும் கோயம்பேடு பஸ் நிலையம் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
கடந்த மாதம் இந்த பஸ் நிறுத்தத்தில் தனியார் நிறுவனம் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் 24 மணி நேர காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டது. பயணிகள் அமர இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இரவு நேரங்களில் பயம் இல்லாமல் பயணிக்க நவீன மின்விளக்குகளும் அமைத்து உள்ளனர். இவ்வளவு வசதிகள் இருந்தும் அரசு விரைவு பஸ்கள் நின்று செல்வதில்லை. ஆகவே செங்கல் பட்டு புறவழிச்சாலை பகுதியில் அனைத்து அரசு விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story