மாவட்ட செய்திகள்

எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை + "||" + The girl student was killed by Eli's suicide police

எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
வலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் மோனிகா (வயது 22). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.


இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மோனிகா எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெற்றோர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மோனிகா உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
2. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
5. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.