மாவட்ட செய்திகள்

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி + "||" + Mother, 2 children drown in dam in the Beat district

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி
பீட் மாவட்டம் மாஜல்காவ் பகுதியை சேர்ந்த பெண் நசீம். இவர் தனது மகள் சேக் தாப்பு(வயது14) மற்றும் மகன் சொகேல்(11) ஆகியோருடன் மாஜல்காவ் அணைப்பகுதிக்கு துணி துவைக்க சென்றார்.
பீட்,

அணையின் அருகே சேக் தாப்புவும், அவளது தம்பியும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென சிறுவன் சொகேல் கால் இடறி அணையில் ஆழமாக பகுதியில் விழுந்தான்.

தண்ணீரில் விழுந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த தம்பியை காப்பாற்ற சேக் தாப்புவும் நீரில் குதித்தாள். ஆனால் சிறுமியின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இருவரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தவித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியான தாய் நசீம் குழந்தைகளை காப்பாற்ற எண்ணி அணைநீரில் குதித்தார். ஆனால் 3 பேரும் கரைக்கு திருப்பமுடியாமல் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).
2. ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.
3. தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது: 4 பெண்கள் உடல் நசுங்கி பலி 5 பேர் படுகாயம்
தஞ்சையில், பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
ஆண்டிப்பட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் நடந்த இருவேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் இறந்துபோனார்கள்.
5. ஜோலார்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஜோலார்பேட்டையை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.