புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார்
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அந்த கட்சியின் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகனான மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தை சேர்ந்த சேர்ந்த டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை அழைத்துக்கொண்டு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி நேற்று தனது ஆன்மிக குருவான சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் விவகாரம் மட்டும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ரங்கசாமியின் கோட்டையாக கருதப்படும் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு முக்கிய பிரமுகர்கள் சிலர் ரங்கசாமியை சுற்றி வருகின்றனர்.
வேட்புமனு தாக்கலை தொடர்ந்து வருகிற 31-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடவும் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Tags :
Next Story