ரவுடியை கொலை செய்ய சதி; மேலும் 8 பேர் கைது 2 நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் பறிமுதல்
ரவுடியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், 3 வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள சத்யா சிறப்பு பள்ளியின் பின்புறத்தில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து லாஸ்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க போலீசார் துரத்திச் சென்றனர்.
இதில் நெருப்புக்குழி டாக்டர் ராமதாஸ் தெருவை சேர்ந்த ரவுடி சேகர் (வயது 30), வெங்கடேசன் (24), கவுதமன் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் போலீசில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் மொத்தம் 12 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஒருவரை கொலை செய்யும் நோக்கிலும், வழிப்பறியில் ஈடுபடவும் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது.
தப்பி ஓடிய கும்பலை சேர்ந்த புதுப்பேட் சதீஷ் (26), மெல்வின் (22), மடுவுப்பேட் பார்த்திபன் (30), சாரம் முத்துக்குமார் (27), முத்தியால்பேட்டை மணிகண்டன் (24), கிருஷ்ணா நகர் விக்கி (24), நெருப்புக்குழி தேவராஜ் (24), குமரகுருபள்ளம் சரவணன் (28) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இடையன்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் புதுப்பேட் பகுதியில் ஒரு காலி மனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள், 3 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலை மறைவாக உள்ள திலீப் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
துரிதமாக செயல்பட்டு ரவுடி கும்பலை கைது செய்த போலீசாரை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பாராட்டினர்.

Related Tags :
Next Story