தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்குகிறது வேலூரில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்குகிறது என்று வேலூரில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வேலூரில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவர்கள் அல்ல. எப்போதும் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா எப்படி சுதந்திரம் அடைந்ததோ, அதேபோன்று மோடி ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும். பிரதமர் மோடி இந்தியாவுக்கு பிரதமர் அல்ல. அவர் ஒரு என்.ஆர்.ஐ. பிரதமர் ஆவார். வெளிநாட்டில் வசித்துவிட்டு அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்பவர்கள் என்.ஆர்.ஐ. ஆவார்கள்.
மோடி ஆட்சி காலத்தில் 48 முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து 55 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள தமிழகத்துக்கு அவர் வரவில்லை. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஒரு மாதத்தில் 3 முறை வந்து சென்றுள்ளார். வர்தா, ஓகி, கஜா உள்ளிட்ட புயல்களினால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது, தமிழக அரசு கேட்ட நிதியை பிரதமர் மோடி கொடுக்கவில்லை. ஆனால் ரூ.3 ஆயிரம் கோடியில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்தார். திவாலான ஆட்சியை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதற்கு பணம் மதிப்பிழப்பை உதாரணமாக கூறலாம். அதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதியடைந்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கி வாசல்களில் பணம் எடுக்க காத்து கிடந்து உயிரிழந்தனர்.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு பலமுறை வாக்குறுதி அளித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதை நிறைவேற்றவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கதாநாயகன் என்றால் ஒரு வில்லன் இருக்க வேண்டும். அந்த வில்லன் மோடிதான்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே உள்ளது. பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மத்தியில் பா.ஜனதா ஆட்சியையும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியையும் அகற்ற பொதுமக்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஊசூர், பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பம் பஸ் நிலையம், குடியாத்தம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த், குடியாத்தம் சட்டமன்ற வேட்பாளர் காத்தவராயன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பஸ்நிலையம், உமராபாத் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் பைபாஸ் விநாயகர் கோவில் அருகே, ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை அருகே, சான்றோர்குப்பம், வாணியம்பாடி பஸ் நிலையம், ஜின்னா சர்க்கிள் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த், சட்டமன்ற வேட்பாளர்கள் காத்தவராயன், வில்வநாதன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

Related Tags :
Next Story