திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 March 2019 4:49 AM IST (Updated: 22 March 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, ஆரணி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தொடர்பான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு கலெக்டர் கந்தசாமி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94441 37000 என்ற செல்போன் எண்ணிலும், 04175- 233333 என்ற அலுவலக எண்ணிலும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட வருவாய்அலுவலர் ரத்தினசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 04175-233006 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலும், இவ்விரு நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விவரம் மற்றும் புகார் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள செல்போன் எண்களின் விவரம் பின்வருமாறு:-

ஜோலார்பேட்டைக்கு வேலூர் கலெக்டர் அலுவலக ஆய்வுக் குழுதலைவர் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94446 75231 என்ற எண்ணிலும், திருப்பத்தூருக்கு சப்-கலெக்டர் பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94450 00418 என்ற எண்ணிலும், செங்கத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வில்சன் ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94454 61753 என்ற எண்ணிலும், திருவண்ணாமலைக்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் எம்.ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94450 00420 என்ற எண்ணிலும், கீழ்பென்னாத்தூருக்கு திருவண்ணாமலை உதவி ஆணையர் (கலால்) எம்.தாஜூதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94450 74597 என்ற எண்ணிலும், கலசப்பாக்கத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94444 84765 என்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்.

போளூர் சட்டமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94450 00193 என்ற எண்ணிலும், ஆரணிக்கு உதவி கலெக்டர் எல்.மைதிலி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 90253 13980 என்ற எண்ணிலும், செய்யாறுக்கு உதவி கலெக்டர் அன்னம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94450 00419 என்ற எண்ணிலும், வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளர். அவரை 94454 77829 என்ற எண்ணிலும், செஞ்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 97902 80800 என்ற எண்ணிலும், மயிலத்துக்கு விழுப்புரம் மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்புரோஸியா நவிஸ்மேரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94454 61760 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story