திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிமுக கூட்டம் கலசபாக்கம் தொகுதி சார்பில் காஞ்சி கூட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆசியுடன் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்’ என்றார்.

முன்னதாக பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேரு, தொகுதி அமைப்பாளர் ஏ.ஜி.காந்தி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, த.மா.கா. மாவட்ட தலைவர் மணிவர்மா, புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வனரோஜா எம்.பி., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் அமுதா, என்.துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.அரங்கநாதன், நளினி மனோகரன், சுரேஷ், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, முன்னாள் கலசபாக்கம் தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, புருஷோத்தமன், திருவண்ணாமலை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தென்மாத்தூர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story