மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் + "||" + In the Kanyakumari parliamentary constituency, including Ponnarathakrishnan 4 people file nominations

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. ஆனால் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில் குமரி மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் மந்தமாக காணப்பட்டது. அதே சமயம் சுயேச்சை வேட்பாளர்கள் வந்து வேட்புமனுக்களை வாங்கிச் சென்றனர்.


இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தார். அவருடன் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் முத்துராமன், தேவ், தர்மலிங்க உடையார், நாகராஜன், ராஜன், மீனாதேவ், உமாரதி, அஜித் மற்றும் தொண்டர்களும் வந்தனர்.

மேலும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் ராஜன், நகர செயலாளர் ஜெயசந்திரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், த.மா.கா. மாநில துணை தலைவர் குமாரதாஸ், மாநில பொதுச்செயலாளர் அரிகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஆர்.செல்வம், பா.ம.க. கில்மன்புரூஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர். ஆனால் கலெக்டர் அலுவலகத்துக்குள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் போலீசார் அனுமதித்தனர். இதனால் தொண்டர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலை ஓரம் காத்திருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முதல் மாடியில் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். அந்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரேவிடம் தாக்கல் செய்தார். மொத்தம் 4 மனுக்கள் அவரது பெயரில் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் முடிந்ததும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி தொகுதியில் முதல் வேட்புமனுவாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நான் தாக்கல் செய்திருக்கிறேன். எங்களது தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். குமரி மாவட்டத்துக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே மக்களுக்காக செய்ததை வைத்து நாங்கள் ஓட்டு கேட்போம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் எங்களுக்கு எதிரணியே கிடையாது. போட்டியே இல்லை. நான் கன்னியாகுமரி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு சென்று ஆயர் நசரேன் சூசையை சந்தித்து ஆதரவு திரட்டியதோடு ஆசியும் பெற்றார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஜே.எபினேசர் (33), நாம் தமிழர் கட்சி சார்பில் மணக்குடி பகுதியைச் சேர்ந்த வி.ஜெயன்றீன் (42), தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிறுவன தலைவரான குழித்துறை பகுதியைச் சேர்ந்த சி.தங்கப்பன் (71) ஆகியோரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஒரே நாளில் மொத்தம் 4 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்காளர் சேர்ப்பு சத்யபிரத சாகு தகவல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
2. கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை
கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
3. கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்தேனா? விஜயதரணிக்கு, எச்.வசந்தகுமார் பதில்
கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறிய புகாருக்கு எச்.வசந்தகுமார் எம்.பி. பதில் அளித்துள்ளார்.
4. கன்னியாகுமரியில் துணிகரம்; ஓட்டல் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
கன்னியாகுமரியில் ஓட்டல் அதிபர் வீட்டில் கதவை உடைத்து 38 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. 28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சி 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.