மாவட்ட செய்திகள்

வாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு + "||" + Emphasize to vote In the shape of Indian map Acceptance Commitment

வாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு

வாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு
திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை பணியாளர்கள் இந்திய வரைபட வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்,

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை பணியாளர்கள் இந்திய வரைபட வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதனை தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர், பணியாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை