காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சீர்
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது.
வண்டலூர்,
பின்னர் தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கல்வி சீர் வரிசை பொருட்களாக இரும்பு பீரோக்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜை, நாற்காலிகள், பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கினர்கள்.
இதே போல நல்லம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அருணாஅம்பிகா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், ஊராட்சி செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமிழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் லூர்துசாமி, செந்தில்குமார், கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே போல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம் அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் லட்சுமி, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை மேள தாளத்துடன் பேரணியாக எடுத்து வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், மதுரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான குணசேகரன் கலந்து கொண்டு எல்.கே.ஜி, யு.கே.ஜி, மாணவர்கள் மற்றும் தலைவர்கள் வேடமிட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ருக்மணி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஜான்ஸ்டான்லி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோபால், ஆதித்யா, ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பாக ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் சிந்தாமணி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை உதவி ஆசிரியர்கள் தமிழரசி, ரமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வேங்கடமங்கலம் ஊர் பொதுமக்கள் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து மேளதாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக கல்விசீர் வரிசை பொருட்களுடன் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துசென்றனர்.
பின்னர் தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கல்வி சீர் வரிசை பொருட்களாக இரும்பு பீரோக்கள், பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜை, நாற்காலிகள், பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கினர்கள்.
இதே போல நல்லம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அருணாஅம்பிகா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், ஊராட்சி செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமிழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் லூர்துசாமி, செந்தில்குமார், கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே போல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம் அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் லட்சுமி, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை மேள தாளத்துடன் பேரணியாக எடுத்து வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், மதுரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான குணசேகரன் கலந்து கொண்டு எல்.கே.ஜி, யு.கே.ஜி, மாணவர்கள் மற்றும் தலைவர்கள் வேடமிட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குன்னம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ருக்மணி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஜான்ஸ்டான்லி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோபால், ஆதித்யா, ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பாக ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் சிந்தாமணி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை உதவி ஆசிரியர்கள் தமிழரசி, ரமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story