நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று வாக்குசேகரிக்க வேண்டும் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்


நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று வாக்குசேகரிக்க வேண்டும் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 9:34 PM GMT)

நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளருமான ரெங்கசாமி, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், பண்ணைவயல் பாஸ்கர், தேவதாஸ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் வேலுகார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அவுரங்கசிங், மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.முருகேசன், சட்டமன்ற வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோர் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் ரெங்கசாமி பேசுகையில், “மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழக நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக மக்களின் நலன் காக்கும் தலைவர் டி.டி.வி.தினகரன் தான். எனவே தமிழகம் பாதுகாப்புடன் திகழ அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதற்கு நமது பூத்கமிட்டியினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். அதை நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். அதை சரியாக செய்தாலே நமது வெற்றியை யாரும் தடுக்க முடியாது”என்றார்.

முன்னதாக வேட்பாளர்கள் தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story