நேரு, இந்திராகாந்திக்கு பிறகு நாடு முழுவதும் அறியப்படுகிற தலைவராக மோடி திகழ்கிறார் இல.கணேசன் பேட்டி


நேரு, இந்திராகாந்திக்கு பிறகு நாடு முழுவதும் அறியப்படுகிற தலைவராக மோடி திகழ்கிறார் இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 6:42 PM GMT)

நேரு, இந்திராகாந்திக்கு பிறகு நாடு முழுவதும் அறியப்படுகிற தலைவராக மோடி திகழ்கிறார் என்று இல.கணேசன் கூறினார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜனதா தேசிய செயற்்குழு உறுப்பினர் இல.கணேசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நேரு, இந்திராகாந்தி ஆகியோருக்கு பிறகு நாடு முழுவதும் பரவலாக அறியப்படுகிற தலைவராக மோடி திகழ்கிறார். குக்கிராமங்களில் கூட மோடியின் பெயர் அனைவருக்கும் தெரிகிறது. தற்போதைய கருத்து கணிப்புகள், பா.ஜனதாவை சரிசெய்து கொள்ள ஒரு வாய்ப்பாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை எதிர்ப்பதற்காக விவசாயிகள் தேர்தலில் போட்டியிடுவது என்பது முன்னேற்ற திட்டங்களை எதிர்த்து போராடுவது போலாகும்.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக இடம் ஒதுக்கியதாலேயே தி.மு.க. தோல்வியை தழுவியது. இந்த முறையும் அதையே செய்துள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அதில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஆனது. இதை பார்த்தால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்பது தெரிகிறது. சிவகங்கையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனை உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்க தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story