சிக்கமகளூரு அருகே துங்கா ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு


சிக்கமகளூரு அருகே துங்கா ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு
x
தினத்தந்தி 25 March 2019 3:15 AM IST (Updated: 25 March 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே, துங்கா ஆற்றில் மூழ்கி 4 பேர் இறந்தனர்.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி டவுனை சேர்ந்தவர் ராமண்ணா. இவரது வீட்டிற்கு உறவினர்களான பிரதீப், நாகேந்திரா, ரத்னாகர் ஆகியோர் வந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ராமண்ணா, பிரதீப், நாகேந்திரா, ரத்னாகர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள துங்கா ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் அவர்கள் 4 பேரும் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பிரதீப் ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 3 பேரும் பிரதீப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஒருவர் பின் ஒருவராக 4 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிருங்கேரி போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நீச்சல் வீரர்களும் அங்கு வந்து உடல்களை ேதடிப்பார்த்தனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. பலியான 4 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி 4 பேர் இறந்த சம்பவம் சிருங்கேரி டவுனில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story