தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது இளநீர்- நுங்கு விற்பனை மும்முரம்
தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது. கோடை வெயில் கொளுத்துவதால் இளநீர்- நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்,
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தஞ்சையில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வருகிறது.
இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனர். வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வந்தது.
100 டிகிரி கொளுத்தியது
நேற்றும் வெயில் அதிகமாக காணப்பட்டது. தஞ்சையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை காலத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி விற்பனை நேற்று அதிக அளவில் நடைபெற்றது.
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தற்போது நுங்கு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. 10 ரூபாய்க்கு 3 நுங்கு என விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை சுற்றுலா மாளிகை, நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்களும் காத்திருந்து நுங்கு வாங்கிச்சென்றனர்.

Related Tags :
Next Story