திருடன் என நினைத்து ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு


திருடன் என நினைத்து ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

திருடன் என நினைத்து ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பால்கர், 

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்தவர் நசீம் சேக்(வயது38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சலையின் அருகே உள்ள சிஞ்சோட்டி ஆசாநகர் குடியிருப்பு பகுதிக்குள் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.

அந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால், அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் திருடன் தான் ஆட்டோவில் வருகிறான் என நினைத்து நசீம் சேக்கின் ஆட்டோவை வழிமறித்தனர்.

இதையடுத்து நசீம் சேக் ஆட்டோவை நிறுத்தி உள்ளார். அப்போது, 3 பேரும் அவரை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து திருடுவதற்கு தானே வந்துள்ளாய் என கூறி, தாங்கள் வைத்திருந்த இரும்புக்கம்பி மற்றும் பெல்ட்டால் சரமாரியாக தாக்கினர்.

இதில், படுகாயம் அடைந்த நசீம் சேக் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நசீம் சேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலையாளிகள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருடன் என நினைத்து ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story