ஆலங்காயம் அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 ஆடுகள் சாவு


ஆலங்காயம் அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 25 March 2019 3:00 AM IST (Updated: 25 March 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் அருகே காட்டுபகுதியில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 ஆடுகள் இறந்தது.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள காவலூரை அடுத்த உமையப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஆர்.எம்.எஸ். புதூர் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்தன.

குடித்த சிறிது நேரத்தில் காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 60 ஆடுகள் சுருண்டு விழுந்து இறந்தன. மேய்ச்சலுக்காக சென்றிருந்தவர்களும், காட்டுப் பகுதியில் இருந்தவர்களும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒரே இடத்தில் 60 ஆடுகள் இறந்ததை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து கவலை அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விஷம் கலந்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story