வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு தொல்.திருமாவளவன் நிதிஉதவி


வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு தொல்.திருமாவளவன் நிதிஉதவி
x
தினத்தந்தி 25 March 2019 4:15 AM IST (Updated: 25 March 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் ஜம்மு-காஷ்மீரில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் ஜம்மு-காஷ்மீரில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும், திரைப்பட நடிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தொல். திருமாவளவன் நேற்று மாலை கார்குடி கிராமத்திற்கு வந்து சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியிடம் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் காந்திமதிக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து சிவச்சந்திரனின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கடந்த ஆண்டு இறந்த தா.பழூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பொன் பாலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story