தேனி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு


தேனி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தொகுதிவாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி, 

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல்கட்ட பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, கலெக்டர் கூறியதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 313 வாக்குச்சாவடி மையங்களுக்கு 370 கட்டுப்பாட்டு கருவிகளும், 370 வாக்குப்பதிவு எந்திரங்களும், 392 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் (வி.வி.பி.ஏ.டி), பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 கட்டுப்பாட்டு கருவிகளும், 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 370 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 314 வாக்குச்சாவடி மையங்களுக்கு 371 கட்டுப்பாட்டு கருவிகளும், 371 வாக்குப்பதிவு எந்திரங்களும், 393 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களுக்கு 351 கட்டுப்பாட்டு கருவிகளும், 351 வாக்குப்பதிவு எந்திரங்களும், 372 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் என மொத்தம் 1220 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1442 கட்டுப்பாட்டு கருவிகளும், 1442 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1527 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 313 வாக்குச்சாவடி மையங்களுக்கு 370 கட்டுப்பாட்டு கருவிகளும், 370 வாக்குப்பதிவு எந்திரங்களும், 385 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 கட்டுப்பாட்டு கருவிகளும், 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 365 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் என மொத்தம் 609 வாக்குச்சாவடி மையங்களுக்கு 720 கட்டுப்பாட்டு கருவிகளும், 720 வாக்குப்பதிவு எந்திரங்களும், 750 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் 1829 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2162 கட்டுப்பாட்டு கருவிகளும், 2162 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2277 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரித்தா, உதவி ஆணையாளர் (கலால்) ராஜா, தாசில்தார் (தேர்தல்) ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story