நாடாளுமன்றம், இடைத்தேர்தல், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் - கமல்ஹாசன் போட்டியிடவில்லை


நாடாளுமன்றம், இடைத்தேர்தல், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் - கமல்ஹாசன் போட்டியிடவில்லை
x
தினத்தந்தி 25 March 2019 5:00 AM IST (Updated: 25 March 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட வில்லை.

கோவை,

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அந்த கட்சியின் சார்பில் 19 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் (தனி)- ஆனந்தமலை எம்.தங்கராஜ் (இந்திய குடியரசு கட்சி).

திருவண்ணாமலை- அருள்.

ஆரணி- ஷாஜி.

கள்ளக்குறிச்சி- கணேஷ்.

நாமக்கல்- தங்கவேல்.

ஈரோடு- சரவணகுமார்.

ராமநாதபுரம்- விஜயபாஸ்கர்.

கரூர்-டாக்டர் ஹரிஹரன்.

பெரம்பலூர்-அருள்பிரகாசம்.

தஞ்சாவூர்-சம்பத்ராமதாஸ்.

சிவகங்கை- கவிஞர் சினேகன்.

மதுரை- அழகர்.

தென்சென்னை- ரங்கராஜன் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).

கடலூர்-அண்ணாமலை.

விருதுநகர்- முனியசாமி.

தென்காசி (தனி)- முனீஸ்வரன்.

திருப்பூர்- சந்திரகுமார்.

பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம்.

கோவை-டாக்டர் மகேந்திரன்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். இதில் அவருடைய பெயர் இடம் பெற வில்லை. இதனால் மூலம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் எனது முகமாக கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இது போல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-

1. பூந்தமல்லி-பூவை ஜெகதீஷ்

2.பெரம்பூர்-பிரியதர்ஷினி

3.திருப்போரூர்-கருணாகரன் (இந்திய குடியரசு கட்சி)

4.சோளிங்கர்-கே.எஸ்.மலைராஜன் (இந்திய குடியரசு கட்சி)

5.குடியாத்தம்-பி.வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி)

6.ஆம்பூர்-நந்தகோபால்

7.ஒசூர்-பி.ஜெயபால்

8.பாப்பிரட்டிப்பட்டி-நல்லதம்பி

9.அரூர்-குப்புசாமி

10.நிலக்கோட்டை- டாக்டர் சின்னதுரை

11. திருவாரூர்- அருண்சிதம்பரம்.

12.தஞ்சாவூர்- துரைஅரசன் (வளரும் தமிழகம் கட்சி).

13.மானாமதுரை- ராமகிருஷ்ணன்.

14. ஆண்டிபட்டி-தங்கவேல் (வளரும் தமிழகம் கட்சி).

15 பெரியகுளம் -பிரபு

16. சாத்தூர்-சுந்தர்ராஜ்.

17. பரமக்குடி-உக்கிரபாண்டியன்.

18. விளாத்திகுளம்-நடராஜ் (தமிழ்விவசாயிகள் சங்கம்).

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story