வேலை வாய்ப்புகள் : இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் 1934 பணியிடங்கள்
இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் பணியிடங்களுக்கு 1934 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ.சி. என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில இ.எஸ்.ஐ. கிளைகளில் ஸ்டெனோகிராபர் மற்றும் மேல்நிலை கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழக இ.எஸ்.ஐ. கழகத்தில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 20 இடங்களும், மேல்நிலை டிவிஷன் கிளார்க் பணிக்கு 131 இடங்களும் உள்ளன. மொத்தம் நாடு முழுவதும் 1934 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாநிலம் வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 15-4-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பிளஸ்-2 படிப்புடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esic.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.