அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 25 March 2019 4:07 PM IST (Updated: 25 March 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி.யில் (ONGC), நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 23 பேரும், உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஓ.என்.ஜி.சி.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் (ONGC), நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 23 பேரும், உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சட்டப்படிப்புடன் ‘கிளாட் 2019’ தேர்வை எதிர்கொள்பவர்கள் உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., எச்.ஆர்.டி முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஜர்னலிசம், மாஸ்கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன்ஸ் முதுநிலை படிப்பு படித்தவர்கள், நெட்-ஜூன் 2019 தேர்வை எதிர்கொள்பவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 9-ந் தேதியாகும்.

ஆராய்ச்சி மையம்

தேசிய தொழுநோய் மற்றும் நுண்ணுயிர் நோய்கள் ஆராய்ச்சி மையம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் புராஜக்ட் ெடக்னீசியன் டி.இ.ஓ., சீனியர் ரிசர்ச் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10,12-ம் வகுப்பு படித்தவர்கள், லேப்டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள், மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்.

நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. வருகிற ஏப்ரல் 2, 3-ந் தேதிகளில் இதற்கான நேர் காணல் நடக்கிறது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.jalma-icmr.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சுரங்க நிறுவனம்

மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி மையம் (CIMFR) திட்ட உதவியாளர் (புராஜெக்ட் அசிஸ்ட்டன்ட்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி, எம்.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், பி.இ.,பி.டெக் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்கள் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. ஏப்ரல் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்துக் கொண்டு நேரில் செல்லவும். இது பற்றிய விவரங்களுக்கு http://cimfr.nic.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மருத்துவ ஆராய்ச்சி மையம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று, வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டர். புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளை மையங்களில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.vcrc.res.in என்ற இணையதளம் வழியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.300 கட்டண டி.டி. ஏப்ரல் 15-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை மேற் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story