பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை விடுவிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது கலெக்டர் தகவல்
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை விடுவிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் விதி மீறல்களை கண்டறிய ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுவினர்கள் தொடர்ந்து வாகன சோதனை மற்றும் புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிலை கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் எந்தவித ஆவணங்களுமின்றி கொண்டு வரப்படும் பணம் இந்த குழுவினால் பறிமுதல் செய்யப்பட்டதை உரிய ஆவணங்களுடன் காண்பித்த பின் விடுவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கு உட்பட்ட நிலை கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் எந்தவித ஆவணங்களும் இன்றி பறிமுதல் செய்யப்படும் தொகையை விடுவிக்கவும், இதுகுறித்து தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த குழுவில் உள்ள அலுவலர்கள் மற்றும் செல்போன் எண் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்- 9443228819, மாவட்ட கருவூல அலுவலர்- 9443033349, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)- 9442846051.
மேற்கண்ட தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story