மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி நேற்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கண்மணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அ.தி.மு.க. மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி, பா.ஜனதா தஞ்சை கோட்ட பொறுப் பாளர் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சுரேஷ்குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளராக கண்ணன் என்பவரும் நாகை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் பகுதியை சேர்ந்த சுபாஷினி நேற்று மயிலாடுதுறை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் திருச்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம், சுயேச்சைகளாக கும்பகோணம் மாங்குடி கிராமத்தை சேர்ந்த கனகசபை, கும்பகோணத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தை சேர்ந்த தேவதாஸ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Tags :
Next Story