சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவன் உள்பட 3 பேர் மனு தாக்கல்
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் உள்பட 3 பேர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அரியலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதன்படி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் (தனி) தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தொல்.திருமாவளவன் தனது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் தொல்.திருமாவளவனுடன் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சின்னப்பா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வடிவழகன் ஆகிய 4 பேர் உடனிருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியின் பாதாள சாக்கடை திட்டம், புவனகிரியில் வாசனை திரவிய தொழிற்சாலை, முந்திரி விவசாயம் போன்ற திட்டங்கள் செயல்பட பாடுபடுவேன். அரியலூரில் ரெயில்வே பாலங்கள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பேன். சிதம்பரம் தொகுதி வளர்ச்சி பெற நான் வெற்றி பெற்றால் பாடுபடுவேன் என்றார்.
இதேபோல் நேற்று அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக தனலட்சுமியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூவானை கிராமத்தை சேர்ந்த ரவி, பெரம்பலூரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் கிட்டு ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு இதுவரை அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் உள்பட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story